முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனாவிலிருந்து 1.52 லட்சம் பேர் குணம்

சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்கள், சிகிச்சையின் பலனாக 1,52,846 பேர் குணமடைந்துள்ளனர். வியாழக்கிழமை காலை நிலவரப்படி 11,320 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Updated On : 1 அக்டோபர், 2020 at 2:35 PM
சென்னையில் கரோனாவிலிருந்து 1.52 லட்சம் பேர் குணம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:58 PM


சென்னை: சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்கள், சிகிச்சையின் பலனாக 1,52,846 பேர் குணமடைந்துள்ளனர். வியாழக்கிழமை காலை நிலவரப்படி 11,320 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில் பத்தாயிரத்துக்கும் கீழ் இருந்த கரோனா பாதிப்பு இன்று 11 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இது மொத்த கரோனா பாதிப்பில் 7% ஆகும். கரோனா பாதித்தவர்களில் இதுவரை 3,210 பேர் பலியாகிவிட்டனர். 

சென்னையில் இதுவரை 1,67,376 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,52,846 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக, கோடம்டபாக்கத்தில் 1,263 பேரும் அண்ணாநகரில் 1206 பேரும் தேனாம்பேட்டையில் 1,103 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisement

மண்டல வாரியாக நிலவரம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.