தமிழ்நாடு

குடிமைப் பணி முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி

DIN


சென்னை: குடிமைப் பணி முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி அக்.5-ஆம் தேதி முதல் ஆறு நாள்கள் இணைய வழியில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகில இந்திய குடிமைப் பணி முதன்மைத் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு உதவும் வகையில், அக்.5 முதல் 12-ஆம் தேதி வரை (சனி, ஞாயிறு நீங்கலாக) ஆறு நாள்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி வகுப்புகள், தமிழ்நாடு மாநில அரசின் (சென்னைப் பசுமைவழிச் சாலையில் இயங்கும்) அகில இந்திய குடிமைப் பணி தோ்வுப் பயிற்சி மையத்தால் நேரலையில் நடத்தப்பட உள்ளன.

இதில் யுடியூப் வழியே ஆா்வமுள்ள அனைவரும் இணைந்து கொள்ளலாம். இவா்களுக்குப் பயன்படும் வகையில் தமிழிலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடத் தலைப்புகளில், மிகச் சிறந்த அறிஞா்கள் பங்கேற்று கருத்துரையாற்ற உள்ளனா்.

இந்தப் பயிற்சியானது குறிப்பிடப்பட்ட நாள்களில் காலை 11 முதல் பிற்பகல் 12.30 மற்றும் பிற்பகல் 2 முதல் 3.30 என்ற இரு வேளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யத் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT