சுமார் 6 மணி நேரமாக தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்புத்துறையினர். 
தமிழ்நாடு

புதுச்சேரி தனியார் வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

புதுச்சேரியில் தனியார் வயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் வயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுச்சேரி அருகே சேதராப்பட்டு - வானூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தனியார் வயர்(Cable) நிறுவனம். இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை அதிகாலை கேபிள் தயாரிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மளமளவென ஆலை முழுவதும் உள்ள பல்வேறு இயந்திரங்களுக்கும் பரவியது.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் பேரில் புதுச்சேரி, வில்லியனூர், கோரிமேடு, சேதராப்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 6 மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தீயினால் நிறுவனத்தில் பல லட்சக்கணக்கான பொருள்கள் எரிந்து சேதமாகியுள்ளன.

தீயினால் எழுந்த கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. தீ விபத்து குறித்து சேதராப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT