தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,489 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,489 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,489 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,348 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 66 பேர் (அரசு மருத்துவமனை -37, தனியார் மருத்துவமனை -29) கரோனாவுக்கு பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 5,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,64,092 பேர் குணமடைந்துள்ளனர். 46,120 பேர் இன்னும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 86,012 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 77,00,011 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT