தமிழ்நாடு

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு லாட்டரி சீட்டுகள் கடத்த முயன்ற சரக்கு வாகனம் பிடிபட்டது

DIN

கம்பம்: கேரள மாநிலத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக தேனி மாவட்டத்திற்கு சரக்கு வாகனம் மூலம்  லாட்டரி சீட்டுகள் கடத்த முயன்றதை கம்பம்மெட்டு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்விக்கு தகவல் கிடைத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கம்பம்மெட்டு  வழியாக தேனி மாவட்டத்தை நோக்கி ஒரு சரக்கு வாகனம் வந்தது.

கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் கேரள மாநில கலால் பிரிவு அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில் குப்பையில் வீசப்படும் கழிவுப் பொருட்கள் மூடைகளுடன் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பண்டல் பண்டலாக அடுக்கிவைத்து கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

இதுதடர்பாக ஓட்டுநர் மற்றும் மற்றொருவரையும் விசாரித்து வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பல லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளவை என்றும்,  தேனி மாவட்டத்திற்கு யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT