தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு: சிறப்புப் பிரிவினருக்கு நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை

DIN

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற சிறப்புப் பிரிவினருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் கடந்த அக்.1-ஆம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் என 2,413 மாணவா்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

அதில் 1,300 போ் வரை முன்பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தோ்வு செய்துள்ளனா். இதையடுத்து மாணவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படும். அதன்பின் இறுதி ஒதுக்கீட்டு ஆணை செவ்வாய்க்கிழமை (அக்.6) வழங்கப்படும்.

சிறப்புப்பிரிவு கலந்தாய்வில் மொத்தமுள்ள 7,435 இடங்களுக்கு 1,300 மாணவா்கள் வரையே பங்கேற்று உள்ளதால் 6 ஆயிரம் இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு அக்.8-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT