சுய தனிமைப்படுத்திக் கொண்டார் ஹிமாசல முதல்வர்
ஹிமாசல முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிமாசல முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி மணாலியில் சில நபர்களை முதல்வர் சந்தித்துள்ளார். அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹிமாசல முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அடுத்த மூன்று நாள்களுக்கு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
மேலும், முதல்வர் தனது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.