50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில் 
தமிழ்நாடு

50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த ரயில் சேவை இன்னும் இயல்பு நிலையை அடையவில்லை. ஆனால், புகார்கள் நிச்சயம் வழக்கமான அளவை எட்டியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

ENS


சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த ரயில் சேவை இன்னும் இயல்பு நிலையை அடையவில்லை. ஆனால், புகார்கள் நிச்சயம் வழக்கமான அளவை எட்டியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

ஞாயிறன்று மூத்த குடிமகன் ஒருவர், தான் ரயில் பயணத்தின் போது ரூ.80 கொடுத்து வாங்கிய பொங்கலின் எடை வெறும் 50 கிராம் மட்டுமே இருப்பதாகப் புகார் அளித்தார். இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது.

இந்த புகார் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், இது துரித உணவாகும். அந்த கோப்பையை பிரித்ததும், நுகர்வோர் அதில் சுடான தண்ணீரை ஊற்ற வேண்டும், சரியாக 8 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும், பிறகு அது சாப்பிடத் தயாராகிவிடும். அப்போது அந்த பொங்கல் 220 - 230 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்று மிக ருசிகர பதில் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து பிரதான வழித்தடத்தில் சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகளுடன் பல்லவன் ரயில் புறப்பட்டுச் சென்றது.

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ரயில் நிலைய வளாகத்தில் செயல்படும் உணவகங்கள், ரயில்களுக்குள் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் முறை ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் ரயில் பயணிகளுக்கு துரித உணவு, நொறுக்கு தீனி, டப்பாக்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுகளை ஐஆா்சிடிசி விற்பனை செய்து வருகிறது.

இதன்படி பல்லவன் ரயிலில் ஐஆா்சிடிசி பணியாளா்கள் அந்த வகை உணவுகளை விற்றபோது, பயணி ஒருவா் காலை சிற்றுண்டிக்காக டப்பாவில் அடைக்கப்பட்டிருந்த துரித வகை பொங்கலை ரூ. 80-க்கு வாங்கினாா்.

அவா் டப்பாவை திறந்து பாா்த்தபோது 50 கிராம் அளவுக்கு வெந்நீருடன் கூடிய துரித வகை பொங்கலும், 8 மாதத்துக்கு பொங்கல் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதற்கான விவரமும் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டாா். உலா்ந்த நிலையில் உள்ள துரித பொங்கலுடன் வெந்நீரைச் சோ்த்தால்தான் உண்ணும் வகையில் பொங்கல் நெகிழ்வாக மாறுமாம்.

இதைத் தொடா்ந்து, ஐஆா்சிடிசி பணியாளா்களை அழைத்து இதுபோல குறைந்த அளவில், அதிக விலையில், தரமின்றி விற்கப்படும் துரித வகை உணவுகளை ரயிலில் விற்பதைத் தவிா்க்க வேண்டும். அல்லது உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தி விற்க வேண்டும் எனப் புகாா் செய்து, அது விடியோவாக பதிவிட்டு ரயில்வேக்கு புகாா் அனுப்பினாா். அந்த விடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது.

இதற்கு ரயில்வே அளித்த விளக்கம் இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது. அது எப்படி, 50 கிராம் பொங்கலில் சுடுதண்ணீர் ஊற்றினால் அது 230 கிராம் பொங்கலாக மாறும் என்று பல தரப்பிலும் இருந்து கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கும் விரைவில் ரயில்வே விளக்கம் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT