தமிழ்நாடு

காரைக்காலில் பள்ளிகளுக்கு வரத் தொடங்கிய மாணவர்கள்

DIN

காரைக்கால் :  பொது முடக்கத் தளர்வுகளின் அடிப்படையில், காரைக்காலில் மாணவர்கள் பாடத்திலுள்ள  சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ள பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

புதுச்சேரி, காரைக்காலில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பாடங்கள் குறித்து சந்தேகங்களை பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் தெளிவுப்படுத்திக்கொள்ள 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

கரோனா பரவல் உள்ள காலத்தில் பள்ளிகள் திறக்கக்கூடாது என அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும் மாணவர்கள் நலன் கருதி அரசு முடிவில் பின்வாங்காமல் இருந்தது. இதன்படி காரைக்கால் மாவட்டத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பள்ளிகளுக்குச் சென்றனர்.

பள்ளி வாயிலிலேயே மாணவர்களுக்கு கை சுத்திகரிப்பான் தரப்பட்டது. வெப்பமானி மூலம் சோதனை செய்யப்பட்டு மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெற்றோரிடமிருந்து  பள்ளிக்கு குழந்தையை அனுப்பிவைக்கும் சம்மதம் தெரிவிக்கும் கடிதத்தையும் மாணவர்கள் கொண்டுவந்தனர்.

மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜன் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று மாணவர்கள் வருகையை பார்வையிட்டார்.

காலை 10 முதல் பகல் 1 மணி வரை மாணவர்கள் பள்ளியில் பாட சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அரசு, தனியார் பள்ளி, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் கணிசமான எண்ணிக்கையில் மாணவ மாணவியர் முதல் நாளில் சென்றனர்.

பள்ளிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பாடங்கள் குறித்து மாணவர்கள் இந்த  வாய்ப்பை பயன்படுத்தி சந்தேகங்களை ஆசிரியர்களிடம் தெரிந்துகொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT