முகப்பு
தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயிகள் போராட்டம்

உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முன்றனர்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
உளுந்தூர்பேட்டை அருகே விவசாயிகள் போராட்டம்
பகிர்:

உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முன்றனர்.  

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் ஏரிக்குச் செல்லும் கால்வாய் மற்றும் மழைநீர் செல்லும் வழியில் தனிநபர் சாலை அமைத்ததால், விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஆக்கிரமிப்பு பாதையை அகற்றக்கோரி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளிடம், உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.