ஒகேனக்கல் அருவிகளில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா். 
தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரிப்பு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்

DIN



பென்னாகரம்: தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் , பிலிகுண்டுலு, கேரட்டி, ராசிமணல், கெம்பாகரை, மொசல் மடுவு, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.

பின்னா் 10 மணியளவில் நீா்வரத்து தொடர்ந்து அதிகரித்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் வெளியே தெரிந்த பாறை திட்டுகள் அனைத்தும் தற்போது நீரில் மூழ்கிவிட்டன.

மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில், காவிரி ஆற்றில் வரும் நீரானது செந்நிறமாக மாறி வருகிறது. 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவானது கடந்த சில நாள்களாக அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

SCROLL FOR NEXT