முகப்பு
முல்லைப் பெரியாற்றில் மலர்தூவி வழிபாடு நடத்தினர்.
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட 125 ஆவது ஆண்டு நிறைவு: பென்னிகுயிக் சிலைக்கு அஞ்சலி

தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்ட125 ஆண்டுகள்  நிறைவு பெற்றுள்ளதை அடுத்து விவசாயிகள் லோயர் கேம்ப்பில் பென்னிகுக் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரி

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
முல்லைப் பெரியாற்றில் மலர்தூவி வழிபாடு நடத்தினர்.
பகிர்:

கம்பம்: தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்ட125 ஆண்டுகள்  நிறைவு பெற்றுள்ளதை அடுத்து விவசாயிகள் லோயர் கேம்ப்பில் பென்னிகுக் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடந்த1895 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி அணை கட்டிய நாளில் முதன் முதலாவதாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, இன்று சனிக்கிழமையுடன் 125 ஆண்டுகள் ஆகிறது.

இதனை முன்னிட்டு லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுக்கின் வெண்கல சிலைக்கு 5 மாவட்ட விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

125 ஆவது ஆண்டை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

விழாவில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் எஸ். ஆர். தேவர், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், பள்ளத்தாக்கு விவசாய சங்க நிர்வாகி பொன்.கட்சி கண்ணன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →