மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த மூன்று நாள்களாக மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
நேற்று காலை வினாடிக்கு 11,024 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று சனிக்கிழமை காலை வினாடிக்கு 22,969 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளதால் நேற்று காலை 97.63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 98.03 அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 98.03 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 62.31 டிஎம்சியாக உள்ளது.