தமிழகத்தில் புதிதாக 5,015 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 5,015 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,015 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,015 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,56,385 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 1,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 65 பேர் (அரசு மருத்துவமனை -26, தனியார் மருத்துவமனை -39) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,252 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 5,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,02,038 பேர் குணமடைந்துள்ளனர். 44,095 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 90,107 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 83,22,832 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.