முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு கரோனா தொற்று உறுதி 

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 11 அக்டோபர், 2020 at 12:10 PM
சி.த.செல்லப்பாண்டியன்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அக்டோபர் 13 ஆம் தேதி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு அவரது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான தூத்துக்குடியைச் சேர்ந்த சி.த. செல்லப்பாண்டியனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.