முகப்பு
தமிழ்நாடு

இசைக் கல்லூரி மாணவிக்கு வீணை வழங்கல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இசைக் கல்லூரியில் பயிலும் நலிந்த நிலை குடும்ப மாணவிக்கு தன்னார்வலர்கள் சார்பில் வாங்கப்பட்ட இசைக் கருவியான வீணை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. 

Updated On : 11 அக்டோபர், 2020 at 4:37 PM
இசைக் கல்லூரி மாணவி அன்புமணியிடம் வழங்கப்பட்ட வீணை.
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இசைக் கல்லூரியில் பயிலும் நலிந்த நிலை குடும்ப மாணவிக்கு தன்னார்வலர்கள் சார்பில் வாங்கப்பட்ட இசைக் கருவியான வீணை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

மருதூர் தெற்கு கிராமத்தில் வசித்து வந்த  கவிஞர் கோவிந்தராஜ்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இந்த நிலையில், இவரது மகள் அன்புமணி திருவையாறு இசைக் கல்லூரியில்  இளநிலை பட்டப் படிப்பு (பி.ஏ) முதலாமாண்டு படித்து வருகிறார். இவரின் படிப்புக்கு உதவி வரும் மதிப்பிற்குரியவர்கள் அறக்கட்டளை சார்பாக வாங்கப்பட்ட வீணையை மாணவியின் வீட்டுக்குச் சென்று  வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் கவிஞர் கணேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தர வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.