முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் 13,751-ஆக அதிகரிப்பு!

சென்னையில் 7 மண்டலங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Updated On : 12 அக்டோபர், 2020 at 12:25 PM
சென்னையில் கரோனா பாதிப்பு
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

சென்னையில் 7 மண்டலங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000-க்கும் கீழ் குறைந்த நிலையில், தற்போது 13,000-யைத் தாண்டியுள்ளது. 

சென்னையில் இதுவரை 1,82,014 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,415 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,64,848 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 13,751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, திங்கள்கிழமை நிலவரப்படி, கோடம்பாக்கத்தில் 1,272 பேரும், அண்ணா நகரில் 1,437 பேரும், அம்பத்தூரில் 1,029 பேரும், அடையாறில் 1,055 பேரும், திருவிக நகரில் 1,221 பேரும், தேனாம்பேட்டையில் 1,327 பேரும், தண்டையார்பேட்டையில் 1,006 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.