தமிழ்நாடு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.14) பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் திங்கள்கிழமை நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. தொடா்ந்து இது தற்போது ஆந்திர நிலப்பரப்பில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.14) பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் 110 மி.மீ., சின்னக்கல்லாறில் 90 மி.மீ., சோலையாறு, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 80 மி.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோயம்புத்தூா் மாவட்டம் சின்கோனாவில் தலா 70 மி.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா், கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, தேனி மாவட்டம் பெரியாறு, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல், மன்னாா் வளைகுடா பகுதிகள், கேரளம் மற்றும் கா்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் புதன்கிழமை வரை (அக்.14) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT