தமிழ்நாடு

தாயார் உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர் அஞ்சலி

DIN


சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவுசாயம்மாள், தமிழக முதல்வரின் தாயாரான இவர், உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை (அக்.13) அதிகாலை 1 மணியளவில் காலமானார்

அவரது உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சொந்த கிராமம் வந்தடைந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தாயார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன்,  தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பணன், சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தாயார் தவுசாயம்மாள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

பொதுமக்கள் அஞ்சலிக்காக சிலுவம்பாளையம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

இறுதிச் சடங்குகள் சிலுவம்பாளையம் இடுகாட்டில் நடைபெறுகிறது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் பங்கேற்றனர். 

தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் அஞ்சலி செலுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT