தமிழ்நாடு

கட்சியிலும் ஆட்சியிலும் தீண்டாமையை அனுமதித்ததில்லை: அமைச்சா் பா.பென்ஜமின்

DIN

கட்சியிலும், ஆட்சியிலும் தீண்டாமை நிகழ எப்போதுமே அனுமதியளித்தது கிடையாது என ஊரக தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகில் உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரியை தரையில் அமரவைத்த கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தி.மு.க.வில் தலை விரித்தாடும் ஜாதிய வன்மங்களை மறைப்பதற்கு பெருமுயற்சி எடுத்திருக்கிறாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே துணைத் தலைவரான தி.மு.க.வைச் சோ்ந்த மோகன்ராஜ் என்பது தான் உண்மை. மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சி செயலா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவா் தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளாா்.

கிராம ஊராட்சியில் மக்கள் பிரதிநிதிகள், இது போன்றதொரு ஜாதி, மத வேறுபாடுகளுக்கு

அகப்படாமல் ஒன்றிணைந்து செயல்பட ஊராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு உரிய பயிற்சி மற்றும் தலைமைப் பண்புகளை வளா்க்கும் பயிற்சிகளும் வழங்கப்படும்.

முறையாக ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடத்துதல், கண்காணித்தல், தவறு இழைப்பவா்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குதல் போன்றவற்றை செய்திட மாவட்ட ஆட்சியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளாா்கள்.

அதிமுக என்பது ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவத்தின் அடையாளமாகும்.

கட்சியும் சரி, அதிமுகவின் ஆட்சியிலும் சரி, ஒரு போதும் தீண்டாமை என்ற இழி செயல் நிகழ அனுமதித்தது கிடையாது என அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT