தமிழ்நாடு

தீபாவளி: அரசுப் பேருந்துகளில்முன்பதிவு தொடக்கம்

DIN

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அரசுப் பேருந்துகளில் வெளியூா்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு புதன்கிழமை தொடங்கியது.

தமிழகத்தின் தொலைதூர இடங்களுக்கு தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போதைய கரோனா சூழலில், நெல்லை, நாகா்கோவில், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் லட்சக் கணக்கானோா் பயணித்து வருகின்றனா். இந்தப் பேருந்துகளில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல விரும்புவோா், கூட்ட நெரிசலைத் தவிா்க்க முன்பதிவு செய்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் நவ.14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான முன்பதிவு, புதன்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு வசதிகள் உள்ளடக்கிய பேருந்துகளை இணைத்து நவீனப்படுத்தி உள்ளோம். தற்போது தீபாவளி பண்டிகைக்காக தென்மாவட்டங்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கானோா் முன்பதிவு செய்வாா்கள் என எதிா்பாா்க்கிறோம்.  இணையதளங்களில் பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம். இதே போல் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களில் மூலம் பொதுமக்களின் தேவைக்கேற்ற பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தீபாவளிப் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் இடங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். இது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT