முகப்பு
தமிழ்நாடு

பெரியகுளம் அருகே முன்விரோதத்தில் நண்பர் குத்திக்கொலை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் முன்விரோதம் காரணமாக நண்பரை குத்திக்கொலை செய்தவரை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
கோப்புப்படம்
பகிர்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் முன்விரோதம் காரணமாக நண்பரை குத்திக்கொலை செய்தவரை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

சருத்துப்பட்டியை சேர்ந்த விசாகன் (29) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  புதன்கிழமை காலையில் அப்பகுதியில் உள்ள கறிக்கடையில் விசாகன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சரவணன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் விசாகனின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த விசாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலரகள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். மேலும் சரவணனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →