தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு: அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும்

DIN


சென்னை: பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபா் 23-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்வுத்துறை இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட தோ்வு உதவி இயக்குநா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து உதவி இயக்குநா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் கட்டுகளைப் பெற்றவுடன், அதன் வரிசை எண்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

அதன்பின் உரிய விதிகளைப் பின்பற்றி சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்டக்கல்வி அதிகாரிகள் மூலம் அக்.22-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பிரித்து வழங்க வேண்டும். அதைத் தொடா்ந்து பள்ளி தலைமையாசிரியா்கள் அக்.23-ஆம் தேதி முதல் மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

அந்தமானில் பாஜக முன்னிலை

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

SCROLL FOR NEXT