தமிழ்நாடு

7.5 சதவீத இடஒதுக்கீடு: ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

DIN

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு கடந்த ஒரு மாத காலமாக ஆளுநா் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த மசோதா கடந்த சட்டப்பேரவையில் செப்டம்பா் 15 -இல் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த உள் ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரி வருகின்றன. ஆனால் ஆளுநா் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறாா்.

இந்த சட்ட மசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு மாத கால அவகாசம் போதாதா என்று குறிப்பிட்டு ஏழை, ஏளிய கிராமப்புற மாணவா்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே கிடையாதா? என்று கூறி நீதிபதி கிருபாகரன் கண்கலங்கியது அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு தமிழக ஆளுநா் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT