சென்னையில் கரோனா பாதிப்பு 
தமிழ்நாடு

சென்னையில் கரோனா பலி 3,500-ஐத் தாண்டியது: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 12,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 12,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், சென்னையில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் இதுவரை 1,88,944 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,504 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,72,533 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 12,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 4 மண்டலங்களில் 1,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கோடம்பாக்கத்தில் 1,138 பேரும், அண்ணா நகரில் 1,219 பேரும், திருவிக நகரில் 1,004 பேரும், தேனாம்பேட்டையில் 1,021 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

மன அழுத்தத்திற்கு இதுவும் முக்கிய காரணம்!

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்!

SCROLL FOR NEXT