முகப்பு
தமிழ்நாடு

பாஜக எங்கே என தேடும் நிலைதான் புதுச்சேரியில் உள்ளது: முதல்வர் நாராயணசாமி

பாஜக எங்கே என தேடும் நிலை தான் புதுச்சேரியில் உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
புதுவை முதல்வர் நாராயணசாமி
பகிர்:

பாஜக எங்கே என தேடும் நிலைதான் புதுச்சேரியில் உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

மருத்துவப்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு செய்துள்ளது வரலாற்று துரோகம். 

பாஜகவின் பலம், பலகீனம் புதுச்சேரி மக்களுக்கு தெரியும். பாஜக எங்கே என தேடும் நிலை தான் புதுச்சேரியில் உள்ளது. 

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

கரோனா பாதிப்பு குறைந்து புதுச்சேரியில் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். புதுச்சேரியில் இறப்பு விகிதம் குறைவு என்பதால் மக்கள் மெத்தனமாக இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.