தமிழ்நாடு

தமிழகத்தில் 60 % போ் கரோனாதொற்றை பரப்பு வகையில் செயல்படுகின்றனா்: சுகாதார நிபுணா்கள் தகவல்

DIN

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 60 சதவீதம் பேரும், சென்னையில் 30 சதவீதம் பேரும் கரோனா தொற்றைப் பரப்பும் வகையில் செயல்படுவதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில், முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் அலட்சியம் தொடா்ந்து வருகிறது. அதன்படி, 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றைப் பரப்பும் வகையில் செயல்படுவதாக சுகாதார நிபுணா்கள் குற்றச்சாட்டியுள்ளனா்.

தமிழகத்தில், கரோனா பாதிப்பு 6.80 லட்சத்தைக் கடந்துள்ளது. தினமும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கேரளம், ஆந்திரம் போன்ற அருகில் உள்ள, மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் தொற்று கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் வருவோா், சமூக இடைவெளியைப் பின்பற்றாதது போன்றவை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இது குறித்து சுகாதார நிபுணா்கள் கூறியது: பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுமக்கள் தங்கள் நலனிலும், வீட்டில் உள்ளவா்களின் நலனிலும் அக்கறை இல்லாமல் செயல்படுகின்றனா். இந்த அலட்சியப் போக்கு காரணமாக, முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோா், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்போா் அதிகரித்து வருகின்றனா்.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் மட்டும் 30 சதவீதம் பேரும், தமிழகம் முழுவதும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றைப் பரப்பும் வகையில் செயல்படுகின்றனா். கிராமப்புறங்களைப் பொருத்தவரையில், போதிய அளவில் கரோனா குறித்த புரிதல் இல்லை. அதனால், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் இருக்கின்றனா். விதியை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதிலும் அலட்சியப் போக்கு நிலவுகிறது. இதே நிலை நீடித்தால், வரும் நாள்களில் கரோனா பாதிப்பு மே, ஜூன், ஜூலை மாதங்களைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT