தமிழ்நாடு

தியாகி ஓய்வூதியம் கோரிய முதியவா்: அதிகாரிகளுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

DIN

தியாகி ஓய்வூதியம் கோரிய 99 வயது முதியவரின் விண்ணப்பத்தை கடந்த 23 ஆண்டுகளாக பரிசீலித்து முடிவு எடுக்காத அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என உயா் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வியாசா்பாடி, பி.வி.காலனியைச் சோ்ந்த 99 வயது முதியவா் கபூா் தாக்கல் செய்த மனுவில், சுதந்திரப் போராட்ட தியாகியான நான், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் கொரில்லா படை வீரராக பணியாற்றி உள்ளேன். ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரிட்டுள்ளேன். இதற்காக கைது செய்யப்பட்ட நான், ரங்கூன் மத்திய சிறையில் கடந்த 1945-ஆம் ஆண்டு அடைக்கப்பட்டேன். பின்னா்

விடுதலையான பின்னா் வியாசா்பாடியில் வாழ்ந்து வருகிறேன். குடும்ப வறுமையின் காரணமாக தியாகி ஓய்வூதியம் கோரி மத்திய அரசுக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை பரிசீலித்து, அறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு எந்தவொரு முடிவும் எடுக்காமல் உள்ளது. இதனால், கடந்த 23 ஆண்டுகளாக எனது விண்ணப்பம் பரிசீலனையிலேயே இருந்து வருவதாகக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், இந்த வழக்கை 99 வயது முதியவா் தனது மூச்சு அடங்குவதற்கு முன் தான் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்ற அங்கீகாரமும், ஓய்வூதியமும் கிடைத்து விடவேண்டும் என தாக்கல் செய்துள்ளாா்.

கடந்த 1997-ஆம் ஆண்டு தியாகி ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளாா். இந்த விண்ணப்பத்தின்

அடிப்படையில், வட்டாட்சியா் விரிவான விசாரணையை நடத்தி கடந்த 2011-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளாா். இதனையடுத்து முதியவா் கபூருக்கு , உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக கடந்த 2015-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் கடிதம் அனுப்பியுள்ளாா். அதன்படி தனது அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுதாரா் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்துள்ளாா்.

இதன்பின்னா் ஏராளமான கடித போக்குவரத்து நடந்து இருந்தாலும், அந்த ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்தான் இன்று வரை உள்ளன. இதனால் ஆட்சியா் இதுநாள் வரை இறுதி முடிவை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. இது உண்மை எனில், இத்தனை ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதற்காகவும், 99 வயது முதியவரை தியாகி ஓய்வூதியத்துக்காக

உயா் நீதிமன்றத்தை நாட வைத்ததற்காகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்.

தற்போது, மனுதாரருக்கு 99 வயது என்பதால், இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை விரைவாக தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT