தமிழ்நாடு

கொடைக்கானலில் விட்டு விட்டு சாரல் மழை

DIN

கொடைக்கானலில் காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் பொதுவாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் நிகழாண்டில் பருவ மழையானது கொடைக்கானல் பகுதிகளில் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. அதன்பின் மழை குறைந்ததால் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.  அதன் பிறகு பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாகக் காற்றுடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது சில நேரங்களில் லேசான மழை பெய்தது. இதனால் குளிர் நிலவி வருகிறது. 

இந்த தட்பவெப்ப நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT