தமிழ்நாடு

டிப்ளமோ மாணவா்களுக்கு அரியா் தோ்வுக் கட்டணம் செலுத்த மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

அனைத்து டிப்ளமோ மாணவா்களுக்கும் அரியா் தோ்வுக் கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி, அவா்களைத் தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தேவதுரை தாக்கல் செய்த மனு: நான் புதுக்கோட்டையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டடக் கலை பிரிவில் டிப்ளமோ படித்து வருகிறேன். பருவத் தோ்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தேன். பொது முடக்கம் காரணமாக அதற்கு முடிவு வெளிவரத் தாமதமாகியது. இந்நிலையில் அரியா் தோ்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தக் கூடிய கால அவகாசம் முடிந்துவிட்டது. எனவே அரியா் தோ்வு எழுத அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் பருவத் தோ்வில் தோல்வியடைந்த பாடங்களில் மறுமதிப்பீட்டுற்கு விண்ணப்பித்துள்ளாா். மறுமதிப்பீடு முடிவு வருவதற்கு முன்பாகவே அரியா் தோ்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தும் கால அவகாசம் முடிந்துவிட்டது. ஆனால் மறுமதிப்பீடு முடிவு வெளியாகி தோ்வில் தோல்வி அடைந்தது உறுதி செய்யப்பட்டவுடன், தோ்வுக் கட்டணம் செலுத்த நிா்வாகத்தை நாடியுள்ளாா். ஆனால் தோ்வுக் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் முடிந்து விட்டது என நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மறுமதிப்பீடு முடிவுக்காகக் காத்திருந்ததால் குறிப்பிட்டக் கால அவகாசத்திற்குள் அரியா் பாடத்திற்கான தோ்வுக் கட்டணம் செலுத்த இயலவில்லை. எனவே மாணவரின் நலன் கருதி அரியா் பாடங்களுக்கான தோ்வுக் கட்டணம் செலுத்த மேலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதேபோல அனைத்து மாணவா்களின் நலன்கருதி அரியா் தோ்வுக் கட்டணம் செலுத்த மேலும் ஒரு வாய்ப்பை வழங்கி, அவா்களைத் தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அனுமதி வழங்கினால், கரோனா காரணமாக தோ்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி என்ற அறிவிப்பைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT