தமிழ்நாடு

திருப்பூரில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

திருப்பூர்: திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பாண்டியன் நகரில் சாக்கடை வசதி ஏற்படுத்திக் கொடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், பாண்டியன் நகரில் சில வீதிகளில் மட்டும் மாநகராட்சி சார்பில் சாக்கடை வடிகால் அமைத்துக் கொடுப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன்பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT