தமிழ்நாடு

ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

DIN

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வலியுறுத்த உள்ளார். 

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இன்னும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இதுதொடர்பான நீதிமன்ற வழக்கிலும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கும்வரை தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து இன்று வலியுறுத்தவிருக்கிறார். இன்று மாலை அவர் ராஜ்பவனில் ஆளுநரை நேரில் சந்தித்து பேசவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக இதுதொடர்பாக அமைச்சர்கள் 5 பேர் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT