முகப்பு
தமிழ்நாடு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு!

சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து, ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து, ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சமீபமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை குறைந்து ரூ. 4,683-க்கு விற்பனையானது. அதன்பின்னர் தங்கத்தின் விலை படிப்படியாக ஏற்றம் கண்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து, ரூ.38,296 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 64 உயர்ந்து, ரூ.4,787 -க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயர்ந்து, ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 900 உயர்ந்து ரூ.66,700 ஆகவும் உள்ளது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்.......................... 4,787

1 சவரன் தங்கம்...............................38,296

1 கிராம் வெள்ளி.............................66.70

1 கிலோ வெள்ளி.............................66,700

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,723

1 சவரன் தங்கம்............................... 37,784

1 கிராம் வெள்ளி............................. 65.80

1 கிலோ வெள்ளி............................. 65800

முழு கட்டுரையைப் படிக்க →