முகப்பு
தமிழ்நாடு

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி தொடக்கிவைத்தார்

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
முதல்வர் பழனிசாமி
பகிர்:

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். 

முன்னதாக இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு, வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இக்கால கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் இருப்பதோடு, ஒரு சிலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது.

இதனால் வறுமை நிலையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு அவர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →