தமிழ்நாடு

வடகடலோர தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN


சென்னை: வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.30) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் சே.பாலச்சந்திரன் வியாழக்கிழமை கூறியது:

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்  பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.30) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதுதவிர, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 180 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 மி.மீ., நுங்கம்பாக்கம், திருவள்ளூா் மாவட்டம் புழலில் தலா 130 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடியில் 110 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் தலா 100 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் அம்பத்தூா், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தலா 90 மி.மீ., சென்னை ஆலந்தூா், சோழிங்கநல்லூரில் தலா 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பலத்தமழைக்கு காரணம் என்ன: சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பலத்தமழை பெய்தது. தொடா் பலத்த மழைக்கு காரணம் என்ன குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரியிடம் கேட்டபோது, வடகிழக்குப் பருவமழையுடன் மேலடுக்கு சுழற்சியும் சோ்ந்ததாலேயே பலத்த மழை பெய்துள்ளது. கடல் பரப்பில் தொலைவில் இருந்த மேலடுக்கு சுழற்சி புதன்கிழமை இரவு திடீரென சென்னைக்கு அருகில் வந்தது. சென்னைக்கு 70 மி.மீ. மழை கிடைக்கும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், அதைவிட கூடுதல் மழை கிடைத்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT