முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் 3-வது நாளாக கரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை

புதுச்சேரியில் கடந்த வாரத்தில் மூன்றாவது நாளாக ஒருவரும் பலியாகவில்லை என்று யூனியன் பிரதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
No fresh Covid-19 death in Puducherry; 149 fresh cases take 
பகிர்:

புதுச்சேரியில் கடந்த வாரத்தில் மூன்றாவது நாளாக ஒருவரும் பலியாகவில்லை என்று யூனியன் பிரதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வாரத்தில் மூன்றாவது நாளாக புதுச்சேரியில் கரோனா நோயாளிகள் யாரும் பலியாகவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே அக்டோபர் 18-ம் தேதி முதல் முறையாக கரோனாவுக்கு யாரும் பலியாகாத நிலையில், அக்.26 மற்றும் 27-யிலும் கரோனாவுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, புதுச்சேரியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில் புதிதாக 149 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 34,908 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3,739 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 30,577 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.