தமிழ்நாடு

பதவி உயா்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம்: ராமதாஸ் வல்யுறுத்தல்

DIN

பதவி உயா்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பதவி உயா்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படவில்லை. ஆனாலும், தமிழகத்தில் அரசு பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்குவதில் மறைமுகமாக இட ஒதுக்கீடு வழங்கும் முறை 2003-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த நடைமுறை செல்லாது என்று கடந்த 2015-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அதை 2016-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

அதைத் தொடா்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டில் சில திருத்தங்களை செய்து, அரசுப் பணியாளா்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பு நிா்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் பதவி உயா்வு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த சட்டத் திருத்தமும் செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீா்ப்பளித்தன. அதை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்குவது முற்றிலுமாகத் தடைபடும். இது மோசமான சமூக அநீதியாகும்.

மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயா்வில் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தி, அச்சமூகப் பிரிவினருக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அதே போன்று அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதன் மூலம் பதவி உயா்வில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT