உ.பி.யில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி விருந்து வைத்த 11 வெளிநாட்டினர் கைது 
தமிழ்நாடு

அண்ணனைக் கொலை செய்த தம்பி கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அண்ணனைக் கொலை செய்த தம்பியைக் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

DIN


தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அண்ணனைக் கொலை செய்த தம்பியைக் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி அருகே புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன்கள் சந்திரசேகர் (40), ராஜகோபால் (35). விவசாயிகளான இருவருக்கும்  திருமணமாகவில்லை. 

இவர்களில் ராஜகோபால் அதிக அளவில் கடன் வாங்கி வருவது குறித்து சந்திரசேகர் புதன்கிழமை இரவு திட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சந்திரசேகரை ராஜகோபால் மாட்டு வண்டியில் பூட்டப் பயன்படுத்தப்படும் இரும்புக் கடை முளையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ராஜகோபாலை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

SCROLL FOR NEXT