திருச்சி மாவட்டத்தில் 14 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
திருச்சி மாவட்டத்தில் 14 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 14 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழக அரசின் இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருது திருச்சி மாவட்டத்தில் 14 பேருக்கு வழங்கப்படவுள்ளது.
குமுளூர், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ம. அன்புச் செல்வன், துலையாநத்தம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ஹரிஹர ராமச்சந்திரன், சேவா சங்கம் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் (தமிழ்) இ. சுகிர்தா பாய், அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அ. முகமது பாரூக், சாவித்ரி வித்யாசலா இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சு. உஷா.
திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கி. வெங்கடேஷ், இ.ஆர். மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் வை. ராமகிருஷ்ணன், பொன்மலைப்படடி டிஇஎல்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் து. சுகந்தி டெ்யசிராணி, தாராநல்லூர் அலங்கவிலாஸ் சிங்காரப்பிள்ளை நினைவு மானிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கே.பி. உதயராணி, திருவெறும்பூர் பெல் தமிழ் பயிற்றுமொழி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் வி. தமிழ்செல்வி, புனித செசீலியா தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜா. எமல்டா ராணி, உப்பிலியபுரம் ஒன்றிய மானிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் இரா. மகேஸ்வரி, முசிறி ஒன்றியம், ஜெயங்கொண்டான் மானிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பா. தமிழ்செல்வி, திருச்சி விமானநிலைய ஆதமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆரிஃபா அப்துல்லாஹ் ஆகிய 14 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (செப்.7) திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறும் விழாவில், ஆட்சியர் சு. சிவராசு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவிக்கவுள்ளார்.