தமிழ்நாடு

தமிழகத்தில் 5,870 பேருக்கு கரோனா; உயிரிழப்பு 61 ஆகக் குறைந்தது

DIN


சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி புதிதா 5,870 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆகக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் 90-ஐ தாண்டி பதிவாகி வந்த நிலையில், இன்று உயிரிழப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,870 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 61 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,748 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5,859 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கரோனாவில் இருந்து 3,98,366 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று சென்னையில் 965 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.57 லட்சமாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி 51,583 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT