முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17,790 கன அடியாக சரிந்தது

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழைத் தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17,790 கன அடியாக சரிந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17,790 கன அடியாக சரிந்தது

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழைத் தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17,790 கன அடியாக சரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
மேட்டூர் அணை
பகிர்:

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழைத் தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17,790 கன அடியாக சரிந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது.நேற்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 21,339கன அடியாக அதிகரித்தது. நேற்று இரவு மழைத் தணிந்ததால் இன்று சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 17,790 கன அடியாக சரிந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.95அடியாக இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 9,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் 53.74 டிஎம்சி ஆக இருந்தது.

நீர்வரத்து குறைந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 90.36 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 90.95 அடியாக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →