சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம். 
தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கியது

தமிழகத்தில் மீண்டும் பயணிகள் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது. 

DIN

தமிழகத்தில் மீண்டும் பயணிகள் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது. 

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த ரயில்களின் சேவை  திங்கள்கிழமை (செப். 7) தொடங்கும் என்றும், டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய கடந்த சனிக்கிழமை அன்று, சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காணப்பட்டது. 

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பயணிகள் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது. ஜூன் மாதத்திற்கு பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 மணி அளவில் கோவையை நோக்கி முதல் ரயில் இயங்கத் தொடங்கியது. முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுவதில்லை.  தெர்மல் பரிசோதனை மூலமாக, பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தி பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சமூக இடைவெளி இன்றி ரயில்பெட்டி இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணிகள்.இடம் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம்.

மேலும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்ட நபர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். கரோனா நோய்த்தொற்று உள்ள நபர்கள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். பயணிகள் சமூக இடைவெளியே கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டதால் பல்வேறு ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT