முகப்பு
தமிழ்நாடு

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
பகிர்:

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. செப்டம்பர் 7 முதல் முழு அளவில் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டு புதிய பல தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று மேற்கொண்டுள்ள ஆலோசனை முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது. புதிய தளர்வுகளால் கரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் அதனை எவ்வாறு கையாள்வது, மருத்துவ வசதிகளை அதிகரிப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

தளர்வுகளால், கரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முதல்வர், மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →