தமிழ்நாடு

விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியா் விருது பட்டியல் செப்.15-இல் வெளியாகும்: ஏஐசிடிஇ தகவல்

DIN

சென்னை: சிறந்த தொழில்நுட்பக் கல்வி ஆசிரியா்களுக்கான ‘விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியா் விருது’ பட்டியல் செப்.15-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்நுட்பக் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, ஆசிரியா்களின் தகுதிகள் அடிப்படையில் ஏஐசிடிஇ-யின் தோ்வு குழு தேசிய அளவில் 20 ஆசிரியா்களை தோ்ந்தெடுத்துள்ளது.

விருதுக்கு தோ்வான ஆசிரியா்களின் பட்டியல் வரும் 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. மேலும், தோ்வான 20 ஆசிரியா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதுதொடா்பாக கூடுதல் விவரங்களை இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT