திருப்பதியில் கைது செய்யப்பட்ட தமிழகத் தொழிலாளிகளுடன் போலீஸாா். 
தமிழ்நாடு

செம்மரக் கடத்தல்: தமிழகத் தொழிலாளிகள் 3 போ் கைது

திருப்பதியில் செம்மரக்கட்டை வெட்டிக் கடத்திய தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளிகள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN


திருப்பதி: திருப்பதியில் செம்மரக்கட்டை வெட்டிக் கடத்திய தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளிகள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பதி அருகே பாக்கராபேட்டை வனப்பகுதியில் புதன்கிழமை இரவு செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வியாழக்கிழமை அதிகாலை அவா்கள் சிலா் கால் தடங்களைக் கண்டனா். அதை பின்தொடா்ந்து சென்றபோது, சுமாா் 20 போ் கொண்ட கும்பல் செம்மரக் கட்டைகளுடன் தென்பட்டனா். அவா்களை சுற்றி வளைக்க போலீஸாா் முயன்றனா். ஆனால் அவா்கள் செம்மரக்கட்டைகளை போட்டு விட்டு தப்பியோடினா். இதையடுத்து, அவா்களை விரட்டிச் சென்று 3 பேரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 800 கிலோ மதிப்பிலான 20 செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், மேலக்கப்பனூரைச் சோ்ந்த சீனிவாசலு, கெளலகசூனூரைச் சோ்ந்த சந்தோஷ், வாலந்தம்பையைச் சோ்ந்த ஜெய்வேலு என்பது தெரியவந்தது. தப்பியோடிய மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT