தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் 13.84 லட்சம் புதிய மாணவர்கள்: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

DIN


ஈரோடு: அரசுப் பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம்  மாணவர்கள் சேர்த்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.      

ஈரோடு மாவட்டம் கோபியில் அவர்  செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: 

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை புதிதாக 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இந்த ஆண்டு 238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வை எழுதவுள்ளனர்.

வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. வந்தால் தகவல் தெரிவிக்கிறேன்.

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு  அரசு  உதவி செய்துள்ளது என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT