தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,495 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக்குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,495 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 978 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய குறிப்பில் மேலும் 76 பேர் (அரசு மருத்துவமனை 39, தனியார் மருத்துவமனை 37) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 8,307 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், ஒரேநாளில் 6,227 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,41,649 பேர் குணமடைந்துள்ளனர். 47,110 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒருநாள் மட்டும் 88,562 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 58,03,778 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மேலும் 2 தனியார் ஆய்வகங்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, செயல்பாட்டில் இருக்கும் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு ஆய்வகங்கள் 65, தனியார் ஆய்வகங்கள் 102.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT