நீட்: தேனியில் 960 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தேனியில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை ஞாயிற்றுக்கிழமை 2 தேர்வு மையங்களில் மொத்தம் 960 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தேனியில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை ஞாயிற்றுக்கிழமை 2 தேர்வு மையங்களில் மொத்தம் 960 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் தேனியில் உள்ள மேரி மாதா மெட்ரிக் பள்ளி, முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதில், மொத்தம் 960 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
தேர்வு மையங்களில் காலை 11 மணி முதல் மாணவ, மாணவவிகள் சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு, அனுமதி அட்டை ஆகியவற்றை சரிபார்த்து அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் கைகழுவுவதற்கான கிருமிநாசினி திரவத்தை தாமாக கொண்டு வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
தேர்வு மையங்கள் முன்பு 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 74 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.