தருமபுரி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் உடல்வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி: தருமபுரியில், நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் தற்கொலை செய்த கொண்டதால் மாணவன் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். ஜெயசித்ரா தம்பதியின் ஒரே மகன் ஆதித்யா. இவர் 2018 ஆம் ஆண்டு 12-ஆம் முடித்துவிட்டு கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி உள்ளார்.
அதில் தோல்வியுற்றாதால் இன்று சேலத்தில் நடைபெறும் நீட் தேர்வு எழுத இருந்தார். இந்தநிலையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே மாணவன் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தருமபுரியில் இறந்த மாணவனின் குடும்பத்திற்கு உரிய இப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் பென்னாகரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரை செல்வன், மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்டத்துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தர்மசெல்வன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.