தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,752 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,752 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 991 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 53 பேர் (அரசு மருத்துவமனை -34, தனியார் மருத்துவமனை -19) பலியானதாக இன்றைய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரேநாளில் 5,799 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,53,165 பேர் குணமடைந்துள்ளனர். 46,912 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 80,123 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 59,68,209 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கோவை மற்றும் புதுக்கோட்டையில் புதிதாக 2 தனியார் பரிசோதனை ஆய்வகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் 65 அரசு ஆய்வகங்கள், 105 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 170 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT